கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவர் கைது காஞ்சிபுரம்,
ஜூலை 1- காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3வது ஆண்டு படிக்கும் 20 வயதுடைய மாணவி ஒருவர் பல் மருத்துவச் சிகிச்சை பெற வந்திருந்த போது அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் வெறுப்படைந்த மாணவி உடனடியாக பல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையில் குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதி எனத் தெரியவந்தது. இதனையடுத்து பல் மருத்துவர் மணிகண்டனை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்.
அரும்பாக்கத்தில் போதைப் பொருள்: 2 பேர் கைது
சென்னை, ஜூலை 1– சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ண றிவுப்பிரிவு தனிப்படையி னருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வள்ள வன் ஓட்டல் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றி ருந்த 2 நபர்களை சோதனை செய்தனர். அப்பொழுது சட்ட விரோதமாக மெத்த பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த அந்தோணி ரூபன் (29), தீபக்ராஜ் (25) ஆகிய இரு வரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14.2 கிராம் மெத்தபெட்டமைன், 2 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர்.