tamilnadu

img

திருடு போன 1790 சவரன் நகைக்கு இழப்பீடு கோரி தொடர் போராட்டம் நடத்த முடிவு

திருடு போன 1790 சவரன் நகைக்கு இழப்பீடு  கோரி தொடர் போராட்டம்  நடத்த முடிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி, செப்.15 - திருடு போன 1790 சவரன் நகைக்கு இழப்பீடு வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்துவது என  தமிழ்நாடு விவசாயிகள் சங்க  கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாட்டில்  முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கத்தின் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய ஏழாவது மாநாடு கெடி லத்தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ஆர்.முருகதாஸ் தலைமை, ஒன்றிய துணைத் தலைவர் பி.பன்னீர்செல்வம் கொடியேற்றி வைத்தார், ஒன்றிய துணைச் செயலாளர் எம்.அஞ்சாபுளி வரவேற்றார், மாவட்டத் தலைவர் டீ.ஏழுமலை துவக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.வி.ஏழுமலை வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.சிவகண்டன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தார். திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆரோக்கியதாஸ் வாழ்த்துரை வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பி.டெல்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானம் திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2010 ஆம ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி நகைகள் திருடு போன சம்பவத்தில் நகை திருடர்களுக்கு ஆதரவாக 15 ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கை காலதாமதம் செய்து வரும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், திருடு போன 1,790 பவுன் நகைகளுக்கு இன்றைய மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி மாநிலத் துணைத் தலைவர் டெல்லிபாபு தலைமையில் நகை கிடைக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு ஒன்றியத் தலைவராக ஆர்.முருகதாஸ், செயலாளராக எம்.வி.ஏழுமலை, பொருளாளராக எஸ்.சிவகண்டன் தேர்வு செய்யப்பட்டனர்.