tamilnadu

img

பாதாள சாக்கடையில் மரணம் தொழிலாளி மனைவிக்கு அரசு வேலை சிஐடியு கோரிக்கையை வாரியம் ஏற்பு!

பாதாள சாக்கடையில் மரணம் தொழிலாளி மனைவிக்கு அரசு வேலை சிஐடியு கோரிக்கையை வாரியம் ஏற்பு!

சென்னை, அக். 6 - பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட, 66 வட்டத்தில் பாதாள சாக்கடையில் இறங்கி கழிவுகளை அகற்றியபோது விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளி குப்பன் உயிரி ழந்தார். உயிரிழந்த  ஒப்பந்த தொழிலாளி குப்பன் குடும்பத்திற்கான ரூ.30 லட்சம் நிவாரண காசோலையை வரைவோலையாக (டிடி) மாற்றி வழங்க வேண்டும், அவரது மனைவி சங்கீதாவுக்கு அரசு வேலை வேலை வழங்க வேண்டும், 2013 ஆண்டு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்ததாரர், பொறுப்பான அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கர், ஹரிஹரன் ஆகிய தொழிலா ளர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமையகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழி லாளர் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.சுந்தரம், சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பழனி, பொருளாளர் இ.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிர்வாக இயக்குநர் கவுரவ்குமார் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில், உயிரிழந்த குப்பனின் மனைவியிடம் நிவாரண காசோ லையை வரைவோலையாக மாற்றி வழங்கப்படும். அவரது மனைவி சங்கீதா விற்கு அரசு வேலை வழங்க வாரியமே அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். சிகிச்சை யில் உள்ளவர்களுக்கு சங்கம் கோரியபடி நிவாரணம் தரப்படும். வழக்கை முறையாக நடத்தப்படும். ஒப்பந்ததாரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பொறுப்பற்ற வாரிய அதிகாரி கள் மீது ஒரு வாரத்திற்குள் முதற்கட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்று மேலாண் இயக்குநர் ஒப்புக் கொண்டதாக க.பீம்ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.