tamilnadu

img

அம்மன் நகர் சாலைகளை செப்பனிட சிபிஎம் வலியுறுத்தல்

அம்மன் நகர் சாலைகளை செப்பனிட சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, அக். 12 - திரிசூலம் அம்மன் நகர் சாலைகளை சீரமைக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.   இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன், கிளைச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கரு ணாநிதியிடம் மனு அளித்தனர். அதில், திரிசூலம் ஊராட்சி அம்மன் நகர் - மூவர சன்பட்டு பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியு மாக உள்ளது. அம்மன் நகர் 19 வது தெருவில் உள்ள மழைநீர் வடி கால் கால்வாய் இணைப்பு ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால்  மழை நீரோடு கழிவு நீர் கலந்து தெருவில் தேங்கி நிற்கிறது. கழிவு நீரிலேயே பள்ளிக் குழந்தைகளும், மக்களும் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் நோய் தொற்று நோய்  ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அம்மன் நகர்-மூவரசம்பட்டு பிரதான சாலையை  சீரமைக்க வேண்டும், 19வது தெருவில் மழை நீர் கால்வாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.