தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நூற்றாண்டு துவங்கியது
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களை அணிதிரட்டிய ஒப்பற்ற தலைவர் பி.எஸ்.தனுஷ்கோடி அவர்களின் நூற்றாண்டு துவங்கியது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் நாகைமாலி எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
