tamilnadu

img

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்கள்! ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்த வாகனங்கள்

தீபாவளியை முன்னிட்டு சொந்தஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்கள்  ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்த வாகனங்கள்

சென்னை, அக்.17- தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வண்ட லூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடு வாஞ்சேரி பகுதிகளை இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் வெள்ளியன்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதுடன், பலர் தாம்பரம், குரோம்பேட்டையில் ஆடை, பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதற்காக வும் குவிந்துள்ளனர். தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், மாலை முதல் மேலும் அதிக பயணிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஓ.எம்.ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.