tamilnadu

img

தொழிலாளர்களை பாதுகாக்க ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!

திருப்பூரில் தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“அமெரிக்காவின் 50% வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் ரூ.3,000 கோடி ஆயத்த ஆடை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. ஆயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

பொருளாதாரத்தில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.