ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி, ஜூலை 28- ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனை பட்டா முதல்வர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திம்மநாயக்கன்பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முதல்கட்டமாக 82 நபர்களுக்கு இலவச மனைப்பட்டாவாக வழங்கும் விழா தவளக்குப்பம் நாணமேடு அருகில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், செந்தில்குமார், அரசுச் செயலர் டாக்டர் முத்தம்மா, இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.