tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

புதுச்சேரியில் தேசியக் கொடி ஏற்றுகிறார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி, ஆக.14- நாட்டின் 79வது சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக் கிழமை (ஆக.15) புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ரங்க சாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை பார்வையிடுகிறார். பின்னர், விழா மேடைக்கு வரும் முதலமைச்சர் சுதந்திர தின உரை யாற்றுகிறார். இதைத்தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்குப் பதக்கம், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் துறைகளுக்கு விருது, மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய மருந்தாளு நர்களுக்கு விருது, சிறந்த என். சி.சி. மாணவர்களுக்குப் பதக்கம், சமூக சேவை செய்தவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கு கிறார். பிறகு, காவல்துறையின் பல்வேறு பிரிவுகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கு தலைமைச் செயலர் சரத் சவுகான், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், தியாகிகளின் வாரிசுகள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். இதேபோல் காரைக்காலில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அமைச்சர் திருமுருகன், யானாமில் அமைச்சர் லட்சுமிநாராயணன், மாகேவில் அமைச்சர் ஜான்குமார் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றிவைக்கின்றனர். சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி முழுவதும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப் பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நக ரின் முக்கியப் பகுதிகளிலும் மாநில எல்லைகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டுள்ளனர்.

மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பேரவை கூட்டம்

விழுப்புரம், ஆக.14- விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 19வது ஆண்டு பேரவை கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சி.ஜெயராமன் தலைமை தாங்கினார். நிர்வாகி தங்க.அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்.சண்முகம் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இணைச் செயலாளர் என்.தமிழ்ச்செல்வன் வரவேற்றார், விழுப்புரம் மண்டல செயலாளர் டி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார். கிளைச் செயலாளர் எம்.புருஷோத்தமன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் எம்.சந்திரசேகரன் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் டி.கே.சம்பத்ராவ், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் எஸ்.கணேசன் நிறைவுரையாற்றினார். வி.சரவணன், கண்ணையன், வி.ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைவராக சி.ஜெய ராமன், செயலாளராக எம்.புரு ஷோத்தமன், பொருளாளராக எம்.சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.