tamilnadu

img

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்

ராணிப்பேட்டை, ஆக. 27-  அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள தி ஜிகே வேர்ல்ட் ஸ்கூலில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டி களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 11 வரை மாவட்டம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. 132 உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85,052 நபர்கள் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். “விளையாட்டு வீரர்கள் திறமையுடன் போட்டியிட்டு மாநில அளவுக்கு தகுதி பெற வேண்டும்” என்று அமைச்சர் ஆர்.காந்தி வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமை தாங்கினார். ஆற்காடு எம்.எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.