tamilnadu

img

பெருந்தமனி வால்வில் கால்சியம் அடைப்பு கேரள இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்

பெருந்தமனி வால்வில் கால்சியம் அடைப்பு கேரள இளைஞருக்கு மறுவாழ்வு  அளித்த சென்னை மருத்துவர்கள்

சென்னை, அக்.7- ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் அவதிப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவரின் உயிரை ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனையாக சிம்ஸ் மருத்துவமனையின் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் காப்பாற்றியி ருக்கின்றனர்.  இரு மாதங்களாக கடுமையான சுவாசப் பிரச்ச னைகள் இந்த இளைஞ ருக்கு இருந்திருக்கின்றன.  கேரளாவில் பல மருத்துவ மனைகளுக்கு சென்றபோது இதயத்திலிருந்து ரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்துகின்ற வால்வு குறுகி யிருப்பது பரிசோதனை களில் கண்டறியப்பட்டன.  இதற்கான அறுவை சிகிச்சையின் சிக்கலான தன்மை மற்றும் உயிருக்கு அதிக ஆபத்துக்கான வாய்ப்பின் காரணமாக, கேரளாவின் உள்ளூர் மருத்துவமனைகள் அறுவை சிகிச்சையை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தன. இருப்பினும் நம்பிக் கையை கைவிடாத இந்த இளம் நோயாளி, சென்னை யின் சிம்ஸ் மருத்துவமனை யில் பெருந்தமனி ரத்த நாள அழற்சிக்கான சிகிச்சை மையத்திற்கு வருகை தந்தார்.  இங்கு பணியாற்றும் நிபுணத்துவம் மிக்க இதய அறுவைசிகிச்சை மருத்துவர்களின் குழு, நம்பிக்கையோடும், தைரியத்தோடும் இந்த சவாலை எதிர்கொண்டது. ஐந்து மணி நேரங்க ளுக்கும் அதிகமாக நீடித்த இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை, இதய மற்றும் பெருந்தமனி நோய்களுக்கான சிகிச்சை மையத்தின் இயக்குனரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். வி.வி. பாஷி மற்றும் இதய மார்பறை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். முகமது இத்ரீஸ் ஆகியோர் வெற்றிகரமாக மேற்கொண்டனர். டாக்டர். பாஷி இது குறித்து கருத்து தெரி விக்கையில், “உடலின் மிகப்பெரிய தமனியான பெருந்தமனி, இதயத்தி லிருந்து ஆக்சிஜன் செறி வான ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.  பெருந்தமனி வால்வு, சீரான ரத்த ஓட்டத்தையும் உறுதி செய்வதுடன், ரத்தம் பின்னோக்கிப் பாய்வதை தடுக்கிறது.  இந்த இளம் நோயாளிக்கு இந்த வால்வு மிக கடுமையாக சுருங்கி ஒடுங்கியிருந்தது; பெருந்தமனியும், அதிக கால்சியம் படிந்து பளிங்கு போல ஆகியிருந்தது.  ஒடுங்கிய பெருந்தமனி வால்வு மற்றும் பளிங்கு போல் கால்சியம் படிந்த பெருந்தமனி ஆகியவற்றின் இரட்டை இடர்வாய்ப்பின் காரணமாக, இது அதிக சிக்கலான பாதிப்பாக இருந்தது.  இளவயது நபர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது.  பெருந்தமனி வால்வு ஒடுக்கம் என்பது, வயது முதிர்ந்த நபர்களில் பொது வானது. பல ஆண்டுகளாக கால்சியம் படிப்படியாக படிவதன் காரணமாக இந்த பாதிப்பு வழக்கமாக உரு வாகும்.  ஆனால், 30 வயதிற்கு கீழ்ப்பட்ட ஒரு நபருக்கு இது இருப்பது உண்மையிலேயே மிக அரிது என்றார். நோயாளியின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எமது குழு வினர், ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளை மிக கவனமாக மதிப்பாய்வு செய்து சிகிச்சை திட்டத்தை துல்லியமாக வகுத்து அதனை செயல்படுத்தி னர்.” என்று கூறினார். இதய மார்பறை அறுவை சிகிச்சை நிபுண ரான டாக்டர். முகமது இத்ரீஸ் பேசுகையில், “இந்நோயாளிக்கு ஒரு மெக்கானிக்கல் வால்வு மாற்றும் செயல்முறையை செய்வது அவசியமாக இருந்தது என்று கூறினார்.