tamilnadu

img

காவேரி மருத்துவமனைக்கு வியட்நாமில்  விருது வழங்கப்பட்டது

காவேரி மருத்துவமனைக்கு வியட்நாமில்  விருது வழங்கப்பட்டது

சென்னை, செப்.19-  பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர் சிகிச்சை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி காவேரி மருத்துவமனைக்கு, வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரில் செப்டம்பர் 10-11 தேதிகளில் நடைபெற்ற ஆசிய மருத்துவமனை நிர்வாகம் (HMA) மாநாட்டில் உயர்மேன்மைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.  இந்த விருதுகள், ஆசியா கண்டத்தில் சுகாதாரப் பராமரிப்பு துறையில் பெரிதும் மதிக்கப்படும் அங்கீகாரங்களுள் முக்கியமானதாக கருதப்படுகிறது; புத்தாக்க முயற்சிகளுடன் திறம்பட செயல்பட்டு இயக்கச் செயல்பாடுகளிலும், நோயாளிக்கான சிகிச்சை பராமரிப்பிலும் உயர்மேன்மையை பேணுகிற மற்றும் முனைப்புடன் வெளிப்படுத்துகிற மருத்துவமனைகளை இவ்விருதுகள் கொண்டாடி அங்கீகரிக்கின்றன.  இந்தாண்டு மாநாட்டு நிகழ்வில் 15 நாடுகளிலிருந்து இவ்விருதுக்காக 1440 பரிந்துரைகள் வந்தன. இறுதியாக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மருத்துவமனை என்ற பெருமையை காவேரி மருத்துவமனை பெற்றுள்ளதாக மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த விருதினை மருத்துவமனை குழுமத்தின் சார்பாக வடபழனி, காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அதிகாரி பூர்ண சந்திரன் பெற்றுக் கொண்டார்.