நடப்பு கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநில கல்விக்கொள்கையின்படி 2025-26ஆம் கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அல்லாமல் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
