tamilnadu

img

கோவிலுக்கு வழிபட சென்ற பட்டியலினத்தவர் மீது தாக்குதல்

கோவிலுக்கு வழிபட சென்ற  பட்டியலினத்தவர் மீது தாக்குதல்

நடவடிக்கை எடுக்க தீ.ஒ.முன்னணி வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, செப்.16 - தேவிர அள்ளியில் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்ற பட்டியலின குடும்பத்தி னர் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் கொடூர தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது  கடுமையான நட வடிக்கை எடுக்க கோரிக்கை  தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், தேவிரஅள்ளி கிராமத்தில் செப்.10 அன்று அனைத்து சமூகத்தினரும் கோவிலில் வழிபாடுக்காக கூடியிருந்தனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மனைவி பட்டு, மகன் விஜய் ஆகியோர் விளக்கு தட்டுடன் வழிபாடு செய்ய கோவில் முன்னால் இருந்த போது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த லெனின், பிரசாந்த், ராஜசேகர், விக்னேஷ் ஆகியோர் வெறித்தனமாக விஜயைப் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும்,கோவிலுக்குள் வந்தால் மற்றவர்க ளுக்கும் தைரியம் வந்துவிடும் என்று மிரட்டியுள்ளனர். வெளியூரில் வேலை செய்வதால் உள்ளூர் வழக்கம் தெரியாது என்று விஜய் விளக்கம் அளித்தபோதும் தாக்கியதுடன், அவரது செல்போனை உடைத்திருக்கிறார்கள். தடுக்க வந்த வினோத்குமாரையும் தாக்கியுள்ளனர். அப்போது, உடனிருந்த விஜயின் தாய் பட்டு காலில் விழுந்து கெஞ்சியபோது, அவ ரையும் கடுமையாக தாக்கி காயப்படுத்தி யிருக்கிறார்கள். 30 பேர் கொண்ட கும்பல் வினோத் குமாரைத் தனியாக இழுத்துச்சென்று முட்டிபோட வைத்து, கண்ணாடி பாட்டிலால் கையில் பல இடங்களில் கிழித்தும், தேங்காய் நார் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலைவெறியுடன் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது அருகிலி ருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி கிருஷ்ண கிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செப்டம்பர் 11ஆம் தேதி பாதிக்கப்பட்ட மூன்று பேரிடமும் காவல்துறையினர் வாக்கு மூலம் பெற்றுச் சென்றுள்ளனர். மருத்துவ மனையிலிருந்து ஊருக்கு வந்தால் விஜய் மற்றும் வினோத்குமாரைக் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி களுக்குத் தகவல் கிடைத்ததும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த வற்றை விசாரித்தனர். பட்டியலின சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், ஆதிக்க சாதி வெறியர்கள் மீது தீண்டாமை மற்றும் சாதிய வன்கொடுமை சட்டங்களில் வழக்குப் பதிந்து கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்ப ட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, துணைத் தலைவர் ஆனந்தன் தலைமையில் மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் முரளி, துணைத் தலைவர் ரவி, பொரு ளாளர் சிவப்பிரகாஷ், நிர்வாகி சாம் ஆகியோர் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரி இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.