சென்னை, ஜூன் 30- வாட்டர் பில்டர் பழுது பார்ப்பதற்காக செயலியை பதிவிறக்கம் செய்த வாலி பரின் வங்கி கணக்கில் இருந்து பணம் சுருட்டப்பட்டு விட்டது. சென்னை பெரவள்ளூர் வெற்றி நகரில் வசிப்பவர் ஆச்சாரிய கிருஷ்ணகுமார் (38). இ
வரது வீட்டில் தனி யார் நிறுவனம் மூலம் வழங்கப்படும் வாட்டர் பில்டரை வாங்கி தண்ணீரை சுத்தப்படுத்தி குடித்து வந்தார். கடந்த 21ஆம் தேதி அவரது வீட்டில் உள்ள வாட்டர் பில்டரை மாற்றுவ தற்காக கிருஷ்ணகுமார் கூகுளில் குறிப்பிட்ட அந்த நிறுவனம் சார்ந்த சர்வீஸ் மையத்தை தேடியுள்ளார். ஒரு தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது வேறு ஒரு தொலை பேசி எண்ணை கொடுத்து, அதில் புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.
உடனே அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டபோது, ஒரு செயலியை அனுப்பி வைத்து அதைபதிவிறக்கம் செய்து புகாரைபதிவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளனர். உடனே கிருஷ்ணகுமார், அந்த செயலியை பதிவிறக் கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.99,999 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து திரு.வி.க. நகர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சைபர் கிரைம் காவல் துறையின் கவனத் திற்கு கொண்டு சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.