tamilnadu

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் அனுசரிப்பு

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் அனுசரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை யொட்டி அஞ்சலி கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.30) மதகடிப்பட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மண்ணாடிபட்டு கமிட்டி தலைவர் பாரதி தலைமை தாங்கினார். முன்னணியின் புதுச்சேரி செயலாளர் சரவணன், சிபிஎம் கமிட்டி செயலாளர் அன்புமணி, மற்றும் நிர்வாகிகள் விநாயகம், உமா, ராமலிங்கம், கந்தநாதன், தர்மசிவம், மதுரை, ரகுநாத், மாரியப்பன், லீலாவதி உட்பட பலர் பங்கேற்று சீனிவாசராவ் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அஞ்சலிக் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.