அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்கங்களை அழைத்து பேச வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 17) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் தமிழ்நாடு மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடராஜன் (என்எப்டிஇ) தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எஸ்.செல்லப்பா, ஸ்ரீதர சுப்ரமணியம் (பிஎஸ்என்எல்இயு), சி.என்.பெருமாள் (சேவா) வளனரசு (எஸ்என்இஏ), விஜயகுமார் (டெபு), கண்ணன் (ஏஐஜஇடிஓஏ), கே.எம்.இளங்கோ (என்எப்டிஇ) உள்ளிட்டோர் பேசினர். தொடக்க கல்வி துறையில் பெண் ஆசிரியர்களை பாதிக்கக்கூடிய அரசாணை 243 பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2 நாள் தொடர் மறியல் போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு நடத்துகிறது. இதன் தொடக்கமாக வியாழனன்று (ஜூலை 17) பள்ளி கல்வி இயக்ககம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.