தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டும் அகில இந்திய வழக்கறிஞர்கள் மாநாடு கோரிக்கை
சென்னை, அக்.18 - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய வழக்க றிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் சென்னை மாவட்ட 11 ஆவது மாநாடு வெள்ளியன்று (அக்.17) பிராட்வேயில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஷினு வரவேற்றார். எம்.பிரியதர்ஷினி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.சிவகுமார் மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் பா.சீனிவாசன் சமர்பித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஜி.சம்கிராஜ் நிறைவு ரையாற்றினார். தீர்மானங்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் மற்றும் மூன்று குற்றவியல் சட்டங்கள், உபா உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி பின்பற்ற வேண்டும். அகில இந்திய பார்கவுன்சில் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். பார்கவுன்சில் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திருக்கு தனி கட்டிடம் கட்ட வேண்டும், பார் கவுன்சில் தேர்தல் வைப்புத் தொகையை குறைக்க வேண்டும்.அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்க வேண்டும்; பெண் வழக்கறிஞர்களுக்கு தனி ஓய்வறை, அறைகள் (சேம்பர்ஸ்) அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஏ.முகமது அனீஷ்கான் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு 37 பேர் கொண்ட மாவட்டக்குழுவின் தலைவராக பா.சீனிவாசன், செயலாளராக ஏ.முகமது அனீஸ் கான், பொருளாளராக இ.வினோத் குமார் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
