பண்ருட்டி அருகே 2000 ஆண்டுகள் பழமையான நெசவு தக்களிகள் கண்டுபிடிப்பு
கடலூர், ஆக. 21- பண்ருட்டி அருகே மேல் காவனூர் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் அரசு கலை கல்லூரி மாணவர் டேவிட் ராஜ்குமார் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் அரிய கண்டுபிடிப்பு ஒன்று தெரியவந்துள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை யான சங்க கால மக்கள் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தும் சுடுமண் தக்களி கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் இமானுவேல் கூறுகையில், சுடுமண்ணால் கூர்மையான வடிவில் செய்யப்பட்ட இந்த தக்களிகளின் முனையில் பருத்திகளை நுழைத்து நூலாக உருவாக்கி ஆடைகள் நெய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்டு பிடிப்பு நமது முன்னோர்கள் நெசவுத் தொழிலில் வல்லமை பெற்றிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பிடத் தக்கது தென்பெண்ணை கரையோரம் உள்ள மேல்காவனூர், தளவானூர் ஆகிய பகுதிகளில் இன்றும் சிலர் பருத்தி பயிரிடு கின்றனர். தொல்லியல் ஆய்வாளர் இம்மானு வேல், தென்பெண்ணை ஆற்று பகுதியில் கரையோரம் பழங்கால மக்கள் வாழ்ந்த தற்கான தொல்லியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறிந்து ஆவணப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.