ஓசூர் 14வது புத்தகத் திருவிழா துவக்கம்
கிருஷ்ணகிரி, ஜூலை 12- கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஓசூர் 14வது புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெற உள்ளது. ஓசூர் சிப்காட்டில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் புத்தகத் திருவிழா அரங்கை திறந்து வைத்தார். புத்தகத் திருவிழா குழு தலைவர் முனைவர் பழ.பாலசுந்தரம் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முனை வர் சேதுராமன் நோக்கம் மற்றும் அறிமுக உரையாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனிராஜ், வட்டாட்சியர் குணசிவா, மாவட்ட நூலக அலுவலர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.