tamilnadu

img

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது
தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், நர்ஸ்கள், அவசர சேவை பணியாளர்கள் உள்ளிட்டோரை தாக்கினால் ஜாமினில் வெளியே வரமுடியாத வகையில் வழக்குகள் போடப்பட்டு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் பிரச்சாரத்தின்போது கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிச்சாமி மிரட்டல் விடுத்த விவகாரம் சர்ச்சையானது. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கம் இதுதொடர்பாக புகார் அளித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது