10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது ஆவடி, செப்.9- அம்பத்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மேற்கு வங்க இளைஞரை போலீசார் செவ்வாயன்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அம்பத்தூர் அருகே கொரட்டூர் பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் வந்த இளைஞரை வழிமடக்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது, அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதில் அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராம்சிங் (38) என்பதும், இவர் அங்கிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி களில் விற்பனை செய்தது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து ராம்சிங்கை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.