tamilnadu

img

வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு

வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு

உடுமலை, ஜூலை 6- வாலிபர் சங்கத்தின் உடுமலை ஒன்றிய மாநாட்டில், நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உடுமலை ஒன்றிய  மாநாடு, ஒன்றியத் தலைவர் ஆ.ராமசாமி தலைமையில்  ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வீ.பாலசுப்ரமணியன் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சு.தமிழ்த்தென்றல் அறிக்கையை முன் வைத்தார். முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ் வாழ்த்திப் பேசினார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றி யத் தலைவராக ஆ.ராமசாமி, செயலாளராக சி.மாசானி, பொருளாளராக சி.கருப்புச்சாமி, துணைத்தலைவராக சி. ஹரிபிரேம், துணைச்செயலாளராக எம்.சபரிகிரிநாதன் உட் பட 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட் டது. மாவட்டச் செயலாளர் கே.பாலமுரளி நிறைவுரையாற்றி னார். எம்.சபரி நன்றி கூறினார்.