tamilnadu

img

வாலிபர் சங்க நிர்வாகி ஆணவப்படுகொலை: திருப்பூரில் மறியல்

வாலிபர் சங்க நிர்வாகி ஆணவப் படுகொலை  திருப்பூரில் வாலிபர் சங்கத்தினர் கோபாவேச மறியல்

திருப்பூர், செப்.16 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மயிலா டுதுறை ஒன்றிய துணைத் தலைவர் வைர முத்து சாதி ஆணவப்படுகொலை செய்யப் பட்டதைக் கண்டித்தும், ஆணவக் கொலைக ளுக்கு எதிராக தனி சட்டம் உடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தி செவ்வாயன்று திருப்பூர்  மாநகராட்சி அலுவலகம் அருகே வாலிபர் சங் கத்தினர் சாலை மறியல் போராட்டம் செய்த னர். மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்க லம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் சங்க ஒன்றிய  துணைத் தலைவர் வைரமுத்து (28) டிப்ளமோ  பட்டதாரி. மெக்கானிக் வேலை செய்து வந் தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும்  26 வயதுடைய பெண்ணும் கடந்த 10  ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது குறித்து பெண் தனது பெற்றோர்களுக்கு கூறி யதை அடுத்து, பெண்ணின் சகோதரர் குணால், அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கியதுடன் ‘என் அக்காவுடன் பழகினால் உன்னை கொலை செய்துவிடுவேன்’ என்று  வைரமுத்துவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.  பெண்ணின் தாயாரும் வைரமுத்து வேலை  பார்க்கும் இடத்திற்கு சென்று கடுமையாக திட்டியுள்ளார்.  இதுதொடர்பாக காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் பெண் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். மேலும்  என்னை தாய், தந்தை மற்றும் சகோதரர்க ளுடன் அனுப்பி வைத்தால் அவர்கள் என்னை  கொன்று விடுவார்கள் என்று காவல்துறையி னரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செப்.15 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணி  அளவில் வைரமுத்து வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது வழிமறித்த பெண் ணின் சகோதரர்கள் குகன், குணால் அரிவாள்  உள்ளிட்ட ஆயுதங்களால் வைரமுத்துவை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.  பெண்ணின் தாயார் மாற்று சமூகத்தைச் சேர்ந் தவர் என்பதால், அவரின் தூண்டுதலின் பேரி லேயே பெண்ணின் சகோதரர்கள் இந்த கொலையைச் செய்துள்ளனர் எனக்கூறி, உட னடியாக ஆணவக் கொலைகளுக்கு எதிராக  தனி சட்டம் நிறைவேற்றக்கோரி செவ்வாயன்று  திருப்பூர் மாநகராட்சி சிக்னலில் வாலிபர்  சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் செய் தனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நிரு பன் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாவட் டச் செயலாளர் கே.பாலமுரளி, துணைச் செய லாளர்கள் பிரவீன்குமார், சுதா, செயற்குழு உறுப்பினர் மவுனிஷ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் விக்னேஷ், சீபா, மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள்  எழுப்பினர். அவர்களைக் காவல் துறையினர்  கைது செய்தனர்.