tamilnadu

img

வாலிபர் சங்க மாநாடு – நிர்வாகிகள் தேர்வு

வாலிபர் சங்க மாநாடு – நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, ஜூலை 14- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈரோடு தாலுகா மற்றும் கோவை வடக்கு நகர மாநாட்டில் புதிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஈரோடு தாலுகா 16 ஆவது மாநாடு தோழர் ஏ.எம்.காதர்  நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. தாலுகா  தலைவர் எம்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். வி. மோகன் வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பாலசுப்பிரமணி துவக்கவுரையாற்றினார்.  இதில், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலியர் கள், தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,  தாலுகா தலைவராக எம்.சதீஷ், செயலாளராக பி. அன்புஜனாதிபதி, பொருளாளராக வி.மோகன் உள் ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 6 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக மாவட்டச் செய லாளர் வி.ஏ.விஸ்வநாதன் நிறைவுரையாற்றினார். சி தினேஷ் நன்றி கூறினார். கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டம், வடக்கு நகர 14 ஆவது மாநாடு ரத்தினபுரியில் விக்னேஷ் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் தினேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து முருகன், மாவட் டத் துணைத் தலைவர் மணி பாரதிய உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினர். இம்மாநாட்டில் புதிய நகரத் தலைவராக விக் னேஷ், செயலாளராக நிசார் அகமத், பொருளாளராக விவின் மற்றும் 15 பேர் கொண்ட நகரக்குழு தேர்வு செய் யப்பட்டது.