முன்னறிவிப்பின்றி மயானத்தில் பணிகள் நகராட்சி அலுவலகம் முற்றுகை
உதகை, அக்.8- கோத்தகிரி அருகே பொதுமக்கள் பயன் படுத்தக்கூடிய மயானப் பகுதியில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிகள் மேற்கொள் ளவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி, 15 ஆவது வார்க்குட்பட்ட குமரன் நகர், இந்திரா நகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்ற னர். இந்நிலையில், இவர்கள் பயன்படுத்தி வந்த பொது மயானப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்க்கொள்ள, வார்டு கவுன்சிலர் கணபதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கனரக இயந்திரமான ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளார். மயானப் பகுதியில் மண் திட்டு பகுதிகளை இடித்து பணிகள் மேற்கொண்டபோது, அப்பகுதியில் புதைக் கப்பட்டிருந்த உடல்களின் எலும்புக்கூடுகள், சவப்பெட்டிகள் வெளியே தெரிந்துள்ளது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் இடிக்கப்பட்ட பகுதியை மீண்டும் சரிசெய்து தர வேண்டும் என வலியுறுத்தி புதனன்று கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தை முற் றுகையிட்டனர். தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
