tamilnadu

img

வனத்துறையின் சிகிச்சைக்குப் பின் தெம்புடன் காணப்படும் காட்டு யானை

வனத்துறையின் சிகிச்சைக்குப் பின்  தெம்புடன் காணப்படும் காட்டு யானை

மே.பாளையம்,ஆக.30: சிறுமுகை வனப்பகுதி யில் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த ஒரு ஆண் காட்டு யானை, வனத்துறையின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு  சனியன்று சோர்விலிருந்து  மீண்டு, வாழைத்தோட்டத் தினுள் புகுந்து வாழைக்காய் களை உண்டது. கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை காப்புக் காட்டு எல்லைப் பகுதியில், கடந்த  நான்கு நாட்களாக உடல் மெலிந்து, சோர்வு டன் ஒரு ஆண் காட்டு யானை நடமாடுவதாக  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, வனத்துறை உயர்  அதிகாரிகளின் ஆலோசனைப்படி, வனத் துறையினர் மருத்துவக் குழுவினருடன் இணைந்து யானைக்குச் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். யானை வரும் வழியில், தர் பூசணி மற்றும் வாழைப்பழங்களில் ஆன்டி பயாடிக் மாத்திரைகள், வலி நிவாரணிகள், குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் கல்லீ ரல் புத்துணர்வு வைட்டமின் மாத்திரைகள் ஆகியவற்றை வைத்து, யானையின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண் காணித்து வந்தனர். ஐந்தாவது நாளான சனிக்கிழமை, யானை தானாகவே முள் காட்டிலிருந்து வெளியேறி, வனத்தை ஒட்டியிருந்த பள் ளத்தைக் கடந்து அருகில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தினுள் நுழைந்தது. கடந்த நான்கு  நாட்களாக மிகுந்த சோர்வுடன், ஓர் இடத்தி லிருந்து நகர முடியாமல், சரிவர உணவு உட் கொள்ளாமல் உடல் மெலிந்து காணப்பட்ட  அந்த யானை, அன்று ஓரளவு தெம்புடன் சற்று  வேகமாக நடந்து சென்று ஆர்வத்துடன் வாழைத்தார்களைப் பிடுங்கி உண்ணத் தொடங்கியது. இந்த நிகழ்வு, கடந்த நான்கு நாட்க ளாகத் தொடர்ந்து மருந்துகள் கொடுத்து  யானையைக் கவனித்துவந்த வனத்துறை யினருக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இருப் பினும், இயற்கையான முறையில் போதிய உணவும், தேவையான அளவு தண்ணீரும் கிடைக்காததால் யானை இன்னும் முழுமை யாக தேறவில்லை. எனவே, யானைக்கு வழங்கப்படும் மருந்துகளும், கண்காணிப் பும் தொடரும் என வனத்துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.