பழங்குடி மக்களுக்கு தரமான வீடுகள் கட்டித்தர வேண்டும்!
மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்
பொள்ளாச்சி, செப்.28- பழங்குடி மக்களுக்கு வீட்டு மனை பட்டாவும், தரமான வீடு களையும் உடனடியாக கட்டித்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட 5 ஆவது மாநாடு, ஞாயிறன்று பொள் ளாச்சியில் தோழர்.வி.சந்திசேகரன் நினைவரங்கத்தில் (வங்கி ஊழியர் சங்க அலுவலகம்) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கருப்புசாமி அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர். பழனிசாமி துவக்கவுரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் வி.எஸ். பரமசிவம் அறிக்கையை முன் வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், கோவை மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்களின் மீது வனத்துறையால் தொடுக்கப்பட்ட பொய் வழக்கு களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ஆனைமலை தாலுகா விற்குட்பட்ட பகுதியில் ஏழை, எளிய பழங்குடியின மாணவர்கள் மேற்கல்வி பயிலும் விதத்தில், உடனடியாக அரசு கலைக்கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி களை அமைக்க வேண்டும். நவ மலை, பாண்டியன் பதி, ஆழியார் அன்பு நகர், தெற்கோட்டு வாய்க் கால், போன்ற பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனை பட்டாவும், தரமான வீடு களையும் உடனடியாக கட்டித்தர வேண்டும். வாகை சேவை அறக் கட்டளை போன்ற தனியார் தொண்டு நிறுவனங்களால் பாதிக் கப்பட்டு, கட்டுமானப் பணிகள் பகுதி யில் நிறுத்தப்பட்ட நிலையில், 200க் கும் மேற்பட்ட வீடுகளை தமிழக அரசு முன் நின்று தரமான முறை யில் கட்டித்தர வேண்டும். பழங்குடி மக்களின் நிதிகளை முறைகேடாக பயன்படுத்துகிற நிறுவனங்க ளுக்கு கட்டுமானப் பணிகளை ஒப் படைக்கிற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் அனைவருக்கும் நலவாரிய அட்டைகள் வழங்கி, வாரிய பலன் களை வழங்க வேண்டும். பழங்குடி யின மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் சாதி ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுகிற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.வேலுச் சாமி, செயலாளராக பி.கருப்பு சாமி, பொருளாளராக, கே.மணி, துணைத் தலைவராக பெரியசாமி, துணைச் செயலாளராக டி. வாணி தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் ரா.சரவணன் சிறப்புரையாற்றி னார். முடிவில், கே.மணி நன்றி கூறி னார்.
