tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, செப். 6- ஒப்பந்த ஊழியர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டுமென சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய  ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட 23 ஆவது மாநாடு தோழர் டி.பி.முத்துசாமி நினைவ கத்தில் சனியன்று நடைபெற்றது.  பி.குமரேசன் தலைமை வகித் தார். இணைச் செயலாளர் எஸ்.சி. பிரகாசம் வரவேற்றார். சம்மே ளன துணைத் தலைவர் வி.அழகு மலை தொடக்கவுரையாற்றி னார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எச்.ஸ்ரீராம் வாழ்த்திப் பேசினார். சம்மேளன பொதுச் செயலாளர் எம்.ஆத்மநாதன் நிறைவுரையாற்றினார்.  இதில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க  வேண்டும். காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த  ஊழியர்களை பணி நிரந்தரம்  செய்ய வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதனைதொடர்ந்து, மாவட் டத் தலைவராக கே.கே.ஜெயப் பிரகாஷ், பொதுச் செயலாளராக  பி.குணசேகரன், பொருளாள ராக ஜி.செந்தில்குமார், துணை தலைவர்களாக 3 பேர், இணை  செயலாளர்களாக 3 பேர் உள் ளிட்ட 9 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.