அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிக்கு நீர் வரவில்லை
கோவை, ஜூலை 30- அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் அதிகாரிகளின் அலட் சியத்தால், வறட்சி பகுதிகள் இன்னும் வறட்சியாகவே உள்ளது என அன்னூர் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து புதனன்று செய்தியார்களிடம் விவசாயி கள் கூறுகையில், விவசாயிகளின் கனவு திட்டமாகக் கருதப் படும் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும், அன்னூர் பகுதியில் உள்ள தங்கள் குளம் - குட்டைகளுக்கு ஒரு சுற்று தண்ணீர் கூட கிடைக்க வில்லை. அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் கீழ், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 160 குளம் - குட்டைகளுக்கு தண்ணீர் வழங்கப்படும் என அரசு அறிவித்து, இணைப்புகள் அமைத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்த னர். ஆனால், வெறும் 10 குட்டைகளுக்கு மட்டுமே தண்ணீர் முறையாக சென்றடைகிறது. மற்றவை காய்ந்து கிடக்கிறது. பவானி ஆற்றில் உள்ள பில்லூர் மற்றும் பவானிசாகர் அணை கள் தென்மேற்கு பருவமழையால் நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றின் வழியாக கடலுக்கு சென்று வீணாகிறது. ஆனால், இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் பயன்படுத்தப் படாமல், அதிகாரிகளின் அலட்சியத்தால் வறட்சி பகுதிகள் இன்னும் வறட்சியாகவே உள்ளது. தண்ணீர் வரும் என நம்பி விவசாயப் பணிகளைத் தொடங்கினோம். ஆனால், தண்ணீர் இல்லாமல் பாதியில் தத்தளிக்கிறோம். அதிகாரி களைத் தொடர்பு கொண்டால், ‘பிரஷர் பத்தவில்லை, வரும்’ என மழுப்பலான பதில்களே கிடைக்கின்றன”. இத்திட்டத் தின் நோக்கம் முறையாக நிறைவேறவில்லை. அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து, அனைத்து குளம் - குட்டைக ளுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.