குடிமனை பட்டாவை பயனாளிகளுக்கு ஒப்படைக்க விதொச வலியுறுத்தல்
திருவள்ளூர், ஆக.30- குடிமனை பட்டா வழங்க, தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள இடத்தை உடனடியாக பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருத்தணி அருகில் உள்ள பீரக்குப்பம் ஊராட்சியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் இட நெருக்கடியில் மிக சிர மத்துடன் வசித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக தொகுப்பு வீடுகள் கட்ட குடிமனை பட்டா வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து ஆதிதிராவிட நலத் துறை சார்பாக குடிமனை பட்டா வழங்கு வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. பலமுறை அவர்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஆக.29) திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழியை சந்தித்து பட்டா கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் உடனடியாக ஆய்வு செய்து தகுதியான நபர்களுக்கு குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். திருத்தணி ஒன்றிய அமைப்பாளர் வி.அந்தோணி, தவிச மாவட்ட பொருளாளர் சி.பெருமாள், துணை தலைவர் ஏ.அப்சல் அகமத் ஆகி யோர் கலந்து கொண்டனர்.