நிலத்தை மீட்க விதொச, மாதர் சங்கம் நடைபயணம்
ஈரோடு, ஜூலை 15 – அந்தியூர் பொய்யேரிக்கரை ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத் தில் வருவாய்த்துறை நடவ டிக்கை எடுக்காத நிலையில், காவல்துறையினர் போராட் டத்தை திசைதிருப்புவது விமர் சனத்திற்குள்ளாகி உள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், மைக்கேல்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொய்யேரிக் கரை பகுதியில் சுமார் 70 குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியிலுள்ள அரசு புறம் போக்கு நிலத்தில் தனிநபர் ஒரு வர் ஆக்கிரமிப்பு செய்து, கிணறு வெட்டி விவசாயம் செய்து வருவ தாகக் குற்றச்சாட்டு எழுந்துள் ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத் தரவிட்டும், வருவாய்த்துறை கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. தனிநபர் தொடர்ந்த வழக் கில், நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், உத்தரவு பிறப் பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த தனிநபரே அரசு நிலத்தை ஆக்கிர மிப்பு செய்ததும்,அம்பலமா னது. இந்நிலையில், குடியி ருப்புவாசிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கமும், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கமும் செவ்வாயன்று நடைபயணப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், போராட்டத்தைத் தடுத்த காவல்துறையினர், மாவட்ட ஆட்சியரிடம் பேசித் தீர்வு காணலாம் எனப் போராட் டக்களிடம் கூறினர். அதன்படி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். விஜயராகவன் தலைமையில் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற னர். அங்கு மாவட்ட ஆட்சியர் இல் லாததால், அவரது நேர்முக உத வியாளரைச் சந்தித்தனர். மனு வைப் பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியர், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவு றுத்துவதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்வில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா. லலிதா, சிபிஎம் அந்தியூர் தாலுகா செய லாளர் ஆர். முருகேசன் மற்றும் எஸ். செபாஸ்டியன், சி. சீனிவா சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.