ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை எதிர்த்து சிறப்பு கருத்தரங்கம் நடத்த விச, விதொச முடிவு
ஈரோடு, செப்.5- விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஒன்றிய அர சின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக ளுக்கு எதிராக தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சிறப்பு கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு தோழர் டி.பி.முத்துசாமி நினைவகத் தில் வெள்ளியன்று நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ். வி.மாரிமுத்து, விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலச் செயலாளர் பழனி, மாவட்டத் தலைவர் ஆர்.விஜ யராகவன், செயலாளர் கே.சண்முக வள்ளி மற்றும் பொருளாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுகுறித்து இச்சங்க நிர்வாகி கள் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.2.50 லட்சம் கோடியை உடனே வழங்க வேண்டும். 200 நாட் கள் வேலையும், ரூ.600 சட்டக்கூலி யும் வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் விவசாய நிலம் வழங்க வேண்டும். விவசாயத்தைப் பாதுகாக்க வேண் டும். விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, செப். 21ஆம் தேதி கோபியில் சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது என இக்கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது. இதில், விவசாய நெருக்கடி யும்- தீர்வை நோக்கியும் என்ற தலைப் பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் முன்னாள் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், வீதியிலிருந்து வாழ் வின் விடியலை நோக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் விதொச அகில இந்திய இணைச் செயலாளர் வி.சிவதாசன், எதிர்கால கடமைகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் மற் றும் விவசாயிகள் சங்கத்தின் மாநி லச் செயலாளர் பி.பெருமாள் ஆகி யோர் உரையாற்ற உள்ளதாக தெரி வித்தனர்.