tamilnadu

img

விஜய்க்கு இருப்பது ‘புகழ் போதை’

விஜய்க்கு இருப்பது ‘புகழ் போதை’

கோவை, அக்.5- விஜய்க்கு இருப்பது ‘புகழ் போதை’. இப்படி எந்த  தலைவரும் இருந்தது கிடை யாது என திராவிடர் இயக்கத்  தமிழர் பேரவை தலைவர் சு.ப. வீரபாண்டியன் தெரிவித்துள் ளார். சங்கமம் அமைப்பின் 20 ஆவது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு  கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் ஆணி வேர் படைப்பரங்கம் இணைந்து, செல்வின்  இயக்கத்தில் “மீசைத் திமுரு” என்ற நவீன  நாடகம் கோவை ஹோப்ஸ் பகுதியிலுள்ள  தனியார் அரங்கில் ஞாயிறன்று நடைபெற் றது. இதில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன், மூத்த  வழக்கறிஞர் ப.பா.மோகன், உள்ளிட்ட முற் போக்கு அமைப்பு தலைவர்கள் கலந்து  கொண்டனர். முன்னதாக, கரூரில் உயிரிழந்த  மக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட் டது. இதன்பின் சு.ப.வீரபாண்டியன் பேசுகை யில், நான் அறிந்த வரை ஒருவரை பார்க்கப்  போய், 41 பேர் இறந்ததாக கேள்விப்பட வில்லை. கும்பமேளா போன்ற நிகழ்வுகள் வேறு, தனி மனிதரை பார்க்கச் சென்று மக்கள்  உயிரை பலிகொடுத்துள்ளனர். மக்களிட மும் பெரிய மாற்றம் கொண்டு வரவேண்டிய தேவை எல்லாரிடமும் உள்ளது என்பதை உணர முடிகிறது. புதிதாக துவங்கிய கட் சிக்கு அமைப்பும், அனுபவமும் இல்லை என் பது தான் காரணம். எந்த தலைவர் வந்தாலும்,  இனி இப்படிபட்ட நிகழ்ச்சிகள் வேண்டாம். திட லில் சென்று பேசட்டும் மக்கள் பாதுகாப்பு முக்கியம். தமிழகம் எல்லா நிலையிலும் மேலோங்கி நிற்கிறோம். ஆனால் இந்த நிகழ்ச்சி தமிழகம் இவ்வளவு தானா என்று பிற மாநிலத்தார் நினைக்கும் அள விற்கு தரம் தாழ்த்தியிருக்கிறது. இனி  இம்மாதிரியான நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அரசு, மக்கள் எல்லோ ருக்கும் உள்ளது. இது ஒரு ‘புகழ் போதை’.  எந்த தலைவருக்கும் இதுபோன்று இருந்த தில்லை. யார் பேச்சை வேண்டுமானாலும் கேளுங்கள், ஆனால், யார் முன்னாலும் ஓடா தீர்கள்; இது மக்களுக்கும், அவர்களுக்கும் மரியாதை இல்லை; தமிழ்நாட்டிற்கும் பெருமை தராது, என்றார்.