முதன்மை கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவலர் பணியிடம் வழங்க வலியுறுத்தல்
சேலம், ஆக.12- கல்வித்துறை அலுவலர்களின் நீதிமன்ற வழக்குகளை கையாள, முதன்மை கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவ லர் பணியிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ள தட் டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க போதிய காலிப்பணியிடம் இல்லாத பட்சத்தில், அவர்களுடைய பணியிடத்தை பதவி உயர்த்தப்பட்ட உதவி யாளர் பணியிடமாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து நிலை ஊழியர்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோ றும் நடத்த வேண்டும். அனைத்து மாவட்டத்திலும் மாதிரி பள்ளிகள், ஒருங்கிணைந்த பள்ளி, கல்வி மாவட்ட திட்ட அலுவலகங்களில் வட்டார வள மையங்களில் பணிபுரி யும் அமைச்சு பணியாளர்களை தேர்தல் கால வாக்குறு தியின்படி, காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கல்வித்துறை அலுவலர்களின் நீதிமன்ற வழக்கு களை கையாள, முதன்மை கல்வி அலுவலகத்தில் சட்ட அலு வலர் பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவ லர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ப.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் க.முத்துக்குமரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநில துணைத்தலைவர் தே.ராஜேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில், சி.சக்திவேலு நன்றி கூறினார்.