புகைப்படக் கலைஞர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்த வலியுறுத்தல்
நாமக்கல், ஆக.20- தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் என புகைப்படக் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 186 ஆவது உலக புகைப்பட தினம் செவ்வாயன்று உலக மெங்கும் கொண்டாடப்பட்டது. இதன்ஒருபகுதியாக நாமக் கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார புகைப்பட கலைஞர் கள் சங்கத்தின் சார்பில், அண்ணா சிலை அருகே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதன்பின், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்து சிகிச்சையிலுள்ள 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள், உணவுப் பொருட் கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சங்கத்தின் உறுப்பினர் கள் ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட வர்கள் பேசுகையில், புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் விதமாக, தனி நலவாரியம் அமைத்துத் தர வேண்டும். இதுகுறித்து பலமுறை நினைவூட்டல் போராட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற இயக்கங் களை நடத்தியுள்ளோம். எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இந்நிகழ்வில், சங்கத்தின் தலைவர் ஹிதாயத்துல்லா, செயலாளர் ஜெயக்குமார், பொரு ளாளர் ஜோதிபாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.