tamilnadu

img

மரவள்ளி கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க ஒன்றிய

மரவள்ளி கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் எருமப்பட்டி ஒன்றியக் குழு சார்பில் திங்களன்று பொன்னேரி கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.சிவச்சந்திரன், ஒன்றியத் தலைவர் மு.து.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநிலச் செயலாளர் பி.பெருமாள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.