அதிகாரிகளின் அலட்சியத்தால் வீடு கிடைக்கவில்லை! மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்
நாமக்கல், செப்.3- பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டியதன் விளைவாக, தொழிலாளிக்கு வீடு கிடைக்கவில்லை. இதனைக் கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், வைப்பமலை அருகே உள்ள மரப்பரை கிராமத்திற் குட்பட்ட குப்பிச்சிபாளையம், செக்கா ரப்பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு 1996 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே, கலைஞர் இல்லம் திட் டத்தின் கீழ், வீடு கட்டித்தரக்கோரி கிராம சபை கூட்டத்தில் மனு அளித்திருந்தார். அதனடிப்படையில், பெறப்பட்ட பட் டாவை பதிவு செய்யும் பொழுது, துரை சாமி என பெயர் இடம்பெறாமல் செட்டி என உள்ளது. இதனால் வீடு வழங்க இயலாது என அதிகாரிகள் கூறிவிட்ட னர். இதைத்தொடர்ந்து, அரசு நடத்தும் ஜமாபந்தி, கிராமசபை மற்றும் உங்க ளுடன் ஸ்டாலின் முகாம்களில், பெயர் திருத்தம் செய்ய வேண்டுமென மனு அளித்தார். ஆனால், அதிகாரிகள் கால தாமதம் செய்து வந்த நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதியன்று, அப் போதைய வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து, பெயர் திருத்தம் செய்து வழங்குங்கள் என அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார். ஆனால், தற் போது வரை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் செக்காரப் பட்டி கிளைச் செயலாளர் எம்.வரத ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், எலச் சிபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலா ளர் வீ.தேவராஜ், மாவட்டக்குழு உறுப் பினர் பழனியம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், பூபதி முரு கன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் பிரியா, பொருளாளர் மகாலட்சுமி, மாற் றுத்திறனாளிகள் சங்க ஒன்றியத் தலை வர் பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், செப்.12 ஆம் தேதிக்குள் பெயர் திருத்தத்திற்கு உத் தரவு வழங்கப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற னர். முன்னதாக, மண்டல துணை வட் டாட்சியர் கலைவாணி, வையப்பமலை வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் அமுதா, காவல் உதவி ஆய்வாளர்கள் வெங்கடாசலம், சின்னதுரை உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.