tamilnadu

img

வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு  போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

சேலம், செப்.12- தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழி லாளர்கள், வெள்ளியன்று வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஓய்வுகால பலன்களை  வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலா ளர்கள், ஓய்வுபெற்றவர்கள் கடந்த 26 நாட்க ளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, சேலம் மெய்யனூர் போக்குவரத்து பணி மனை முன்பு, வெள்ளியன்று பட்டை நாமம் போட்டு, வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, தங்களின் பணத்தைப் பிடித்துக் கொண்டு தங்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்வது வன்மையான கண்ட னத்திற்குரியது என்றனர். முன்னதாக, தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, போராட்டத்தை தொடர்ந்தனர்.