tamilnadu

img

தொழிற்சங்கத் தலைவர் தோழர் எம்.ஏ.பாபு படத்திறப்பு

தொழிற்சங்கத் தலைவர் தோழர் எம்.ஏ.பாபு படத்திறப்பு

கோவை, செப்.14- இந்திய தொழிற்சங்க மையத்தின் கோவை மாவட்ட ஸ்தாபக தலைவர்க ளில் ஒருவரான தோழர் எம்.ஏ.பாபு-வின்  படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. 50 ஆண்டுகாலம் தொழிற்சங்க இயக்கத்தில் கோவை மாவட்ட முன் னோடிகளில் ஒருவராக செயல்பட்டவர் தோழர் எம்.ஏ.பாபு. ஹோட்டல் தொழி லாளர் சங்கம், மரம் அறுக்கும் தொழி லாளர் சங்கம், சுமைப்பணி சங்கம்,  பொதுத்தொழிலாளர் சங்கம், ஆட்டோ  தொழிலாளர் சங்கம், மலர் தொழிலா ளர் சங்கம் போன்ற சங்கங்களை துவக் கியும், அதற்கு தலைமை ஏற்று நடத் திய தலைவர் எம்.ஏ.பாபு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு நகரக் குழு உறுப்பினராகவும் நீண்ட காலம்  செயல்பட்டுள்ளார். அவரது தியாக வர லாற்றை நினைவுக்கூறும் வகையில், கோவை கணபதியில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.ராஜன் தலைமை வகித் தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, தலைவர் கே.மனோ கரன், பொருளாளர் ஆர்.வேலுச்சாமி  ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். இதில் சிஐடியு மாவட்ட துணைத்தலை வர்கள் கே.ரத்தினகுமார், டி.கோபால கிருஷ்ணன் மற்றும் இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ராதா கிருஷ்ணன் நன்றி கூறினார்.