தொடர் விடுமுறையால் களைகட்டிய உதகை சுற்றுலாத் தலங்கள்!
உதகை, அக்.5. தமிழ்நாட்டில் ஆயுதபூஜை, கர் நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களிலும் தசரா பண்டிகை என தென்மாநிலங்களில் 10 நாள் வரை தொடர் விடுமுறை விடப்பட்ட தால், அந்த மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர், உதகையில் திரண் டதால் சுற்றுலாத் தலங்கள் களைக் கட்டின. உதகை தாவரவியல் பூங்கா வில் 2 ஆவது சீசன் தொடங்கியுள்ள நிலையில், மலர் மாடத்தை சுற்று லாப் பயணிகள் பார்வையிடுவதற் காக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேரி கோல்டு, லில்லியம், டையான்தஸ், பால்சம் உள்ளிட்ட மலர் ரகங்களை சேர்ந்த 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடம் மற்றும் பெரணி இல் லம் அருகே புல்வெளியில் அலங் காரம் செய்யப்பட்டுள்ளன. பூங்கா வுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி கள் மாடத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்த னர். இதேபோல் கர்நாடக அரசு பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிக ரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களி லும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ஞாயிறன்று அதிகமாக இருந்தது. சுற்றுலா வாகனங்கள், தனியார் வாகனங்களில் பொதுமக்கள் உதகைக்கு படையெடுத்ததால், முதுமலை, கூடலூர், உதகை பகுதி களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட் டது. போக்குவரத்தில் மாற்றம் இதுகுறித்து உள்ளூர் காவல் துறையினர் கூறுகையில், தொடர் விடுமுறையால சுற்றுலாப் பயணி கள் நலன்கருதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, குன்னூர், உதகைக்கு வந்து பய ணத்தை முடித்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், கோத்தகிரி வழியாக ஒரு வழி பாதையில் செல்ல வேண் டும். குன்னூர் வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள், ஆவின் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தங்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு, சிறப்புப் பேருந்துகளில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு செல்ல வேண்டும். கூடலூர் வழி யாக உதகைக்கு வரும் சுற்றுலா பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள், எச்.பி.எப்., பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத் திவிட்டு, அங்கிருந்து சிறப்புப் பேருந்துகளில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு செல்ல லாம். காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை, ஊட்டி நகரம், குன்னூர் மற்றும் கூடலூர் நகருக்குள் எக்கார ணம் கொண்டும் கனரக வாகனங் களுக்கு அனுமதியில்லை, என்ற னர். வாகனங்கள் தடுத்து நிறுத்தம் திடீர் போக்குவரத்து மாற்றத் தால், கேரளம், கர்நாடகாவில் இருந்து உதகைக்கு வந்த சுற்று லாப் பயணிகள், ஓட்டல்கள், விடுதி களில் முன்பதிவு செய்து வருபவர் கள், அதிகாலையில் உதகை அருகே எச்.பி.எப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், தனி யார் வாகனங்களை நாட வேண்டியி ருந்ததால், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். இதனால், சில சுற்றுலாப் பயணிகள் தலைக்குந்தா பகுதியுடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க, சீசன் மற்றும் விடுமுறை நாட்க ளில் சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
