tamilnadu

img

தமுஎகசவின் கலைமாலை – கருத்தரங்கம்

தமுஎகசவின் கலைமாலை – கருத்தரங்கம்

சேலம், செப். 6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சேலம்  மாவட்ட 14 ஆவது மாநாடு கலை மாலை, கருத்தரங்கம் சேலம் மாநக ரம் சாமிநாதபுரம் பகுதியில் நடை பெற்றது. தமுஎகசவின் சேலம் மாவட்ட மாநாட்டையொட்டி, சாமிநாதபுரம்  பகுதியில் தோழர் கரிசல் குயில்  கிருஷ்ணசாமி நினைவு மேடையில்  கருத்தரங்கம் சனியன்று நடைபெற் றது. அமைப்பின் மாவட்ட தலைவர் மேட்டூர் வசந்தி தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மாநகர கிளைச் செயலாளர் ஆர்,கே.சங்கர் வரவேற் றார். நிர்வாகிகள் ஜார்ஜ் மற்றும்  எம்.கற்பகம் முன்னிலை வகித்தனர்.  இக்கருத்தரங்கத்தில் வெறுப் பின் கொற்றம் வீழ்க என்னும் தலைப் பில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் சே. மெ.மதிவதனியும், அன்பே அறமென எழுக என்னும் தலைப்பில், தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர் கவி ஞர் அ.லட்சுமிகாந்தன் ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்னதாக நிகழ்வில், சேலம் அக்னி கலைக்குழு, மேட்டூர் மாங்கு யில் இசைக் குழு சார்பில் கலை  நிகழ்ச்சிகளும், ஆத்தூர் மாரிதாஸ்  மற்றும் தமுஎகச-வின் காதலர்கள் சங்கத்தின் சேர்ந்திசை பாடல்களும்  நடைபெற்றது. இதில், தமுஎகச  மாவட்டச் செயலாளர் ஜி.கண்ணன், பொருளாளர் ஜ.சேக் அப்துல்லா  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், மாநகரப் பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி உரையாற்றி னார்.