செப்.16இல் திருப்பூர் மாவட்ட கல்விக் கடன் முகாம்
திருப்பூர், செப். 2 – திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல் விக் கடனுக்கு விண்ணப்பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் செப்டம்பர் 16ஆம் தேதியன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் கல்விக் கடன் வழங்கும் முகாம் செப்டம்பர் 16 செவ்வாயன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரை தளம், அறை எண் 20-ல் நடைபெறும். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.pmvidy alaxmi.co.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத் தைத் தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வரு மானச் சான்று நகல், சாதிச் சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்விக் கட்டண விபரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றி தழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண் டும். இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவர்களின் விண்ணப்பங்க ளைப் பெற்று கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் முகாமில் கலந்து கொண்டு கல்விக் கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்க ளுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை 0421-2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
காவல் ஆணையர் வரும் வேளையில் வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள்
திருப்பூர், செப். 2 – திருப்பூர் மாநகரில் குமார் நகர் வலையங்காடு பகுதியில் அந்த வழியாக காவல் ஆணையர் தினமும் அலுவலகத் திற்கு வரும் நேரத்தில் மட்டும் வாகன சோதனை என்ற பெயரில் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவதை விடுத்து, மக்களுக்குத் தேவைப்படும் வேளையில் உதவி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் கோரியுள்ளனர். திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வ.உ.சி.நகர் கிளைச் செயலாளர் கிருத்திகை வாசன், கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி ஆகியோருடன் திங்களன்று சென்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து நெருக்கடி மிக்க நேரத்தில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென வாகனத்தை தடுத்து நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே மக்களின் உயி ரோடு விளையாடும் இது போன்ற வாகனத் தணிக்கையை காவல் துறையினர் கைவிட வேண்டும். அதேசமயம் இப்பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் காவலர்கள் யாரும் இருப்பதில்லை. மாலை நேரங் களில் வ.உ.சி.நகர் தெற்கு முதலாவது வீதி கேஸ் குடோன் அருகில் சுமார் நூறு மாணவர்கள் கோஷ்டியாகச் சேர்ந்து கொண்டு, மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள் கின்றனர். மேலும் குடிபோதையில் வருவோர் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இது போன்ற சமயங்களில்தான் காவல் துறையின் உதவி மக்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே இதற்கேற்ப காவல் துறை நடவடிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.
செப்.10இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருப்பூர், செப். 2 – திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப் டம்பர் 10ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். அறை எண் 20இல் நடைபெறும் இக்கூட்டத்தில் பதிவு செய்யப் பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் தங்கள் கோரிக்கைகளைத் தொகுத்து நேரடியாக தெரிவிக்க லாம் என்று ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் நடைபெற வேண்டிய விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ரூ.11.57 கோடிக்கு காய்கறி விற்பனை
திருப்பூர், செப்.2- திருப்பூர் மாநகரில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளில் கடந்த மாதம் ரூ.11.57 கோடிக்கு காய்கறிகள் விற்பனை நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாநகரில் தென்னம்பாளையம் பகுதியில் தெற்கு உழவர் சந்தை மற்றும் புதிய பேருந்து நிலையம் பின்புறம் வடக்கு உழவர் சந்தை என இரண்டு உழவர் சந்தைகள் உள்ளன. இதில், விவசாயிகள் பதிவு செய்து தினந்தோறும் விற்பனை செய்து வருகின்ற னர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தினந்தோறும் அதி காலை 2:30 மணி முதல் 8:00 மணி வரை விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய் யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. நேரடியாக விவசாயிகளிடமிருந்து காய்க றிகள் மற்றும் பழங்களை வாங்கும் போது அவை புதியதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி கடை கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளுக்கும் உழவர் சந்தைகளில் இருந்து காய்கறிகள் வாங்குவது வழக்கம். இந்நிலையில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் கடந்த மாதம் 6,743 விவசாயி கள் 2,126 மெட்ரிக் டன் காய்கறிகளை விற் பனை செய்திருப்பதன் மூலம் ரூ.8 கோடியே 56 லட்சம் வருவாய் ஈட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தையில் 3,026 விவசாயிகள் மூலம் 812 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் ரூ.3 கோடியே 31 லட்ச வருவாய் ஈட்டியுள்ளனர் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இரு உழவர் சந்தைகளிலும் மொத்தமாக 2 லட்சத்து 35 ஆயிரத்து 100 வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர். உழவர் சந்தை அடையாள அட்டை வேளாண் பொருட்களை விற்பனை செய் யும் விவசாயிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட உழவர் சந்தையில் விண்ணப்பித்து உழவர் சந்தையில் வியாபாரம் செய்வதற்கான அடையாள அட்டை பெற வேண்டியது அவசி யம். ஏற்கனவே திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் 2000 க்கும் மேற் பட்டவர்கள் வேளாண் அடையாள அட்டை பெற்றுள்ள நிலையில், புதிதாக பெற வேண்டி யவர்கள் வடக்கு உழவர் சந்தை அலுவல கத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள லாம் என வடக்கு உழவர் சந்தை அலுவலர் தெரிவித்துள்ளார்.