தொழிலாளர்களின் உடல் உறுப்புகள் திருட்டுசி
ஐடியு நாமக்கல் மாநாடு கண்டனம்
நாமக்கல், ஆக. 25 – விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி உடல் உறுப்புகளை திருடும் சமூக விரோ திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு நாமக்கல் மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் தனியார் திருமண மண்ட பத்தில் தோழர் கே.நாராயணன் நினைவரங்கத்தில் சிஐடியு நாமக் கல் மாவட்ட 9ஆவது மாநாடு ஞாயி றன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை ஏற்றார். முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் ஐ.ராயப்பன் கொடி யேற்றி வைத்தார். மாவட்ட உதவிச் செயலாளர் சு. சுரேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாவட்ட உதவிச் செயலாளர் கே.மோகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எம்.தனலட்சுமி துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் ந.வேலுசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார் மாவட்ட பொருளாளர் எம்.ரங்கசாமி வரவு செலவு அறிக்கை வைத்தார். மாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே. தங்க மணி உரையாற்றினார். இதில், நாமக்கல் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில், விசைத் தறி தொழிலாளர்களின் வறு மையை பயன்படுத்தி, புரோக்கர் கள் மூலம், கிட்னி கல்லீரல் திருடப் படுகிறது. இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட கட்டாய கடன் வசூல் கூடாது என்ற சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் நுண்நிதி நிறுவனங் கள் என்ற பெயரில் தொழிலாளர் களை கொடுமைப்படுத்தும் நிறு வனங்கள் மீது நடவடிக்கை வேண் டும். உடல் உறுப்புகளை இழந்த தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை அரசு சார்பில் ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பள்ளிபாளையம் குமாரபாளையம் ஜவுளி தொழில்களை பாதுகாக்க பள்ளிபாளையத்தில் விரைந்து சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க வேண்டும். விசைத் தறி தொழிலில் ஈடுபடும் தொழிலா ளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந் தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளி சீருடை தைக்கும் பணியை தையல் தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரித்து வழங்க வேண்டும். பஞ் சாலை தொழில்களில் சுற்றுச்சுவர் அமைத்து சுவற்றுக்குள் பெண் களை பணியமர்த்தி சுமங்கலி திட் டம் என்ற பெயரில் தொழில் நடத்து வதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாநாட்டில், மாவட்ட தலைவ ராக எம்.அசோகன், மாவட்டச் செய லாளராக ந.வேலுசாமி, மாவட்டப் பொருளாளராக எம்.ரங்கசாமி, மாவட்ட துணைத் தலைவர்களாக ஜெயக்கொடி, செங்கோடன், சௌந்தரராஜன், கண்ணன், பெரிய சாமி, துணைச் செயலாளராக மோகன், சிவராஜ், சுரேஷ், தன பால், மலர்கொடி உட்பட 35 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகி களை அறிமுகப்படுத்தி மாநில துணைத்தலைவர் ஆர். சிங்கார வேலு நிறைவுரையாற்றினார். முடி வில் வரவேற்புக் குழு செயலாளர் கே.குமார் நன்றி கூறினார்.