ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதாம் செங்கோட்டையனுக்கு இபிஎஸ் டீம் பதில்
கோவை, செப்.9- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர் சிக்கும் விதமாக, இபிஎஸ் அணியினர் ஆடு நனையு தேன்னு ஓநாய் அழுகுதாம் என போஸ்ட்டர் ஒட்டி கோஷ்டி மோதலை தெருவுக்கு கொண்டு வந்துள்ள னர். அதிமுக-வில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர்சிக்கும் விதமாக கோவையில் அதிமுக அம்மா பேரவை நிர்வாகி அனல் அசார் தலைமையில் பல் வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எடப் பாடி பழனிசாமியின் கோவை வருகையை முன்னிட்டு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதாம். நரிகளின் மிரட் டலுக்கு அஞ்சாத மாவீரனே வருக” என இ.பி.எஸ்.ஐ வர வேற்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் கள், செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்துள் ளது. “மனசு சரியில்லை, ஹரித்வார் ஆன்மிகப் பயணம் செல்கிறேன்” என ஊடகங்களிடம் தெரிவித்துவிட்டு, டில்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது கட்சி வட்டாரத்தில் பேசுபொரு ளாகியுள்ளது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தன் செய்தியாளர் சந்திப்பின்போது செங்கோட்டையன் பாஜகவின் மேல் மட்டத் தலைவர்கள் யாரையும் சந் திக்கவில்லை என பேசிய நிலையில் இந்த சந்திப்பு தொடர்பாக அ.தி.மு.க.வினர் பலரும் செங்கோட்டை யனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இ.பி.எஸ். கோவை வருகை தரும் நிலையில், அவ ருக்கு ஆதரவாகவும், செங்கோட்டையனை எதிர்த் தும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் உட்கட்சி மோதலை மேலும் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போலி இணையதளங்கள் மூலம் டிக்கெட் ரத்து செய்வதாகக் கூறி ரூ. 18 லட்சம் மோசடி
கோவை, செப். 9- இணையதளம் மூலம் டிக்கெட் அல்லது ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்தவர்கள், அதை ரத்து செய்ய முயலும்போது போலி இணையதளங்களால் குறிவைக்கப்படுகின்றனர். இந்த மோசடி கும்பல் போலி யான இணையதளங்களை உருவாக்கி, அதில் தங்கள் கைபேசி எண்களைப் பதிவு செய்து, அதன் மூலம் பொது மக்களிடம் பேசி பணத்தைப் பறித்து வருகின்றனர். கோவையில் ஒரே வாரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட் டோர் இந்த மோசடிக்கு ஆளாகியுள்ளனர். கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர், ஹோட்டல் முன்பதிவை ரத்து செய்ய ஆன்லைனில் தேடியபோது, ஒரு போலி இணையதளத் தில் இருந்த கைபேசி எண்ணை அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வங்கி விவரங்களை உள்ளீடு செய்ய ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு அந்த மோசடி கும்பல் கூறியுள்ளது. அதை நம்பி மூதாட்டி தனது வங்கி விவரங்களைக் கொடுத்ததால், அவரது கணக் கிலிருந்து ரூ. 18 லட்சம் திருடப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித் துள்ளார். பொதுவாக, ரயில், பேருந்து அல்லது விமான டிக் கெட்களை ரத்து செய்ய, அதிகாரப்பூர்வ செயலியில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது தெரியாமல், சிலர் கைபேசி எண்களை ஆன்லைனில் தேடும்போது, மோசடி கும்பலின் போலி இணையதளங் கள் முதலில் தோன்றும். அந்த எண்களை அழைத்தால், மோசடி கும்பல் முதலில் ரூ. 1 மட்டும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி, நம்பிக்கை ஏற்படுத்தி, பின்னர் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை (OTP) கேட்கின்றனர். அதைக் கொடுத்துவிட்டால், நமது கணக்கிலுள்ள அனைத்துப் பணமும் திருடப்படும். இணையதளத்தைப் பயன்படுத்தும்போது, முகவரி ‘https://’ என்று தொடங்குகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம். ‘http://’ என்று தொடங்கும் முகவரிகள் பெரும்பாலும் போலி இணையதளங்க ளாக இருக்கலாம் என போலீசார் எச்சரிக்கின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை நம்பி தங்கள் வங்கி விவரங்கள் அல்லது ஓ.டி.பி-யைப் பகிர வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
யானை தாக்கி ஒருவர் பலி பொதுமக்கள் மறியல்
உதகை, செப்.9- கூடலூர் அருகே யானை தாக்கி எஸ்டேட் கண் காணிப்பாளர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் கூட லூர் - உதகை சாலைமறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியைச் சேர்ந்த தனியார் எஸ்டேட் கண்காணிப் பாளர் சம்சுதீன். இவரது சக அதிகாரி செல்லதுரை இரு வரும் செவ்வாயன்று காலை ஓவேலியில் உள்ள தனி யார் எஸ்டேட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற னர். அப்போது குவிண்ட் பகுதியில் செல்லும்போது காட்டுயானை ஒன்று இவர்களை விரட்டி உள்ளது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். விரட்டி வந்த யானை சம்சுதீனை தூக்கி வீசி, பின்னர் காட்டுக் குள் சென்றது. தகவலறிந்து எஸ்டேட் தொழிலாளர் கள் இருவரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப் பட்ட சம்சுதீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், யானை தாக்குதலால் மக்கள் பலியான சம்பவங்களைக் கண்டித்தும், வனத்துறை யின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பொதுமக்கள் கூட லூர் - உதகை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து செல்லாததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, அரசியல் பிரமுகர்கள் போலி சாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் விடு விக்க கோரிக்கை வைத்தனர். போலீசார் கைது செய்த வர்களை விடுவித்ததுடன் காட்டு யானைகளிலிட மிருந்து பாதுகாப்பு தருவதாக கூறியதுடன் பொது மக்கள் இறந்தவரின் உடலை வாங்கி சென்றனர். இதனால், கூடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு இடையே கூடலூர் அனைத்து வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் வரும் 11 ஆம் தேதியன்று முழு கடை அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வடமாநிலங்களுக்கு அதிகளவில் செல்லும் சேலம் ஜவ்வரிசி
சேலம், செப்.9- நவராத்திரி விழாவை முன்னிட்டு, சேலத்திலிருந்து வடமாநிலங்களுக்கு அனுப்ப சேகோ ஆலைகளில் ஜவ் வரிசி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், தரு மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மர வள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அறு வடை செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கை விவசாயிகள் சேலம், நாமக்க லிலுள்ள சேகோ ஆலைகளுக்கு விற் பனைக்கு அனுப்புகின்றனர். சேகோ ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கிலி ருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற் பத்தி செய்யப்படுகிறது. ஜவ்வரிசி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற் றும் வடமாநிலங்களுக்கும் அதிகள வில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், செப்.22 ஆம் தேதி நவ ராத்திரி விழா தொடங்குகிறது. இதை யொட்டி சேலத்திலிருந்து வடமாநிலங் களுக்கு ஜவ்வரிசியை அனுப்ப சேகோ ஆலைகளில் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இதுகுறித்து சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 1300க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய சேகோ ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற் பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியில் 30 சதவிகிதம் தமிழகத்திற்கும், 70 சதவி கிதம் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, கர் நாடகா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு சேலத்தில் இருந்து கடந்த இரு வாரமாக வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி அனுப்பப்படுகிறது. அடுத்த வாரத்தில் சேலத்திலிருந்து தினசரி 50 முதல் 100 டன் அளவுக்கு ஜவ்வரிசி மூட்டைகள் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும், என்றனர்.
நிலம் அபகரிப்பு: ஆட்சியரிடம் புகார்
சேலம், செப்.9- போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், நெய்ய மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான 7.65 சென்ட் நிலத்தை, தும்பல் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், போலி ஆவணம் தயாரித்து அபகரிப்பு செய்துள்ளார். இதனை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி, திங்க ளன்று சேகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தார். அதில் மேலும் கூறியிருப்பதாவது, ஆத்தூர் வன எல்லை நிர்ணய அலுவலரின் தீர்ப்பு நகலை மோசடியாக தயார் செய்து, நில ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும், தொடர்ந்து அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அம்மாசி, சுந்தர் (எ) தமி ழன் ஆகியோர் உடனிருந்தனர்.