tamilnadu

யுத்தங்களின் அரசியல்’ காலை நேர தொடர்பு வகுப்பு திருப்பூரில் இன்று முதல் நடைபெறுகிறது

யுத்தங்களின் அரசியல்’ காலை நேர தொடர்பு வகுப்பு திருப்பூரில் இன்று முதல் நடைபெறுகிறது

திருப்பூர், செப்.18- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சார்பில், “யுத்தங்களின் அரசியல்!”  என்ற நெடுந்தலைப்பில் பத்து நாட்கள் காலை  நேர தொடர் வகுப்பு வெள்ளிக்கிழமை முதல்  நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு சார்பில் ஒவ்வொரு ஆண் டும் 10 நாட்கள் காலை நேர தொடர் வகுப்பு  நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது  13 ஆம் ஆண்டு காலை நேரத் தொடர் வகுப்பு  திருப்பூர் அவிநாசி சாலை தியாகி பழனிசாமி  நிலையத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை சரியாக 6.30 மணிக்கு வகுப்புத்  தொடங்கி, காலை 7.30 மணிக்கு முடிவடை யும்.  இன்று முதல் நாள் 19ஆம் தேதி “போர்க ளின் வரலாறு!” என்ற தலைப்பில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில கல்விக்குழு உறுப்பி னர் திருச்சி அன்வர் உசேன் உரையாற்றுகி றார். இரண்டாம் நாள் சனிக்கிழமை, “உலக  மகா யுத்தங்கள்!” எனும் தலைப்பில், தீக்கதிர்  நாளிதழ் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் பேசு கிறார். மூன்றாம் நாள் ஞாயிறன்று எழுத்தா ளர் நர்மதாதேவி, “இந்தியா சந்தித்த போர் கள்!” எனும் தலைப்பிலும், நான்காம் நாள் திங்களன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத் துக்கண்ணன், ‘போரும், போலி தேசபக்தி யும்’ எனும் தலைப்பிலும், ஐந்தாம் நாள் செவ் வாயன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயற்குழு உறுப்பினர் க.சுவாமிநா தன், “போரும், பொருளாதார இழப்புக ளும்!” எனும் தலைப்பிலும் உரையாற்று கின்றனர். ஆறாம் நாள் புதனன்று, எழுத்தாளர், ஆசி ரியர் ஆயிஷா நடராஜன், “போரும், சூழலி யல் பாதிப்புகளும்”, எனும் தலைப்பில் பேசு கிறார். ஏழாம் நாள் வியாழனன்று மார்க்சிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு “டிஜிட்டல் யுத்தம்!” என்ற தலைப் பில் உரையாற்றுகிறார். எட்டாம் நாள் வெள்ளி யன்று, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, “போர்களும், மதங்கள் நிறுவனம யமாதலும்!” என்ற தலைப்பிலும், 27ஆம் தேதி ஒன்பதாம் நாள் சனியன்று, கட்சியின் மத் திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, “போரும், தலைமுறை அழி்ப்பும்”  என்ற தலைப்பில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவது பற்றியும் பேசுகிறார். கடைசி நாளான செப்.28ஆம் தேதி ஞாயி றன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெசண்முகம், “போரும்  அமைதியும்!” என்ற தலைப்பில் தொடர் வகுப்பை நிறைவு செய்து வைத்து சிறப்பு ரையாற்றுகிறார்.  தற்கால உலகில் பொருளாதார நெருக்க டிகளும், முரண்பாடுகளும் அதிகரித்திருக் கும் நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர்,  பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவ ரும் இன அழிப்பு போர் ஆகியவை கடும்  பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இத்து டன் மேற்காசியாவில் மற்ற நாடுகளிலும் போர் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், போர்களின் பின்னால் இருக்கும்  அரசியல் சமூக பொருளாதார காரணங்களை யும், போரினால் அழிவைச் சந்தித்து பாதிக்கப் படுவோர், ஆதாயம் அடைவோர் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த வகுப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் அரசி யல் ஆர்வமுள்ளோர், இளைஞர்கள், பெண் கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.