புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநாடு வலியுறுத்தல்
சேலம், செப்.28- தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) ஆறாவது மாநில மாநாடு ஞாயிறன்று சேலத்தில் தோழர் நேபால் தேவ் நுழைவு வாயிலில் தோழர் பி.என். உண்ணி நினைவரங்கத்தில் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே. தியாக ராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எஸ்.மூர்த்தி கொடியேற்றி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் எம். தட்சணாமூர்த்தி அஞ்சலி தீர்மா னத்தை முன்மொழிந்தார். தீர்மானங் களை பொதுச்செயலாளர் வி.குப்பு சாமி முன்மொழிந்தார். ஒன்றிய அரசு மோட்டார் தொழிலை சீர்குலைக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ள 2019 புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றியதை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலைகளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், விவி கிரி லேபர் இன்ஸ்டியூட் கூறும் சமூக பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து துறையில் தனியார் மயத்தை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், நலவாரிய பலன்களை அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப் பட்டது. கருத்தரங்கு இதைத்தொடர்ந்து, ‘மோட்டார் தொழிலும் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான தீர்வுகள்’ குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் கே.ஆறுமுக நயினார், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமை யாளர்கள் சங்க தலைவர் அப்சல், லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சி.தனராஜ், தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்.முரளிதரன், அனைத் திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை தலைவர் ஆரணி சி.குணசேகரன், தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல கூட்டமைப்பு மாநி லத் தலைவர் பி.என்.சிவகுமார், அரசாங்கப் போக்குவரத்து ஊழியர் சங்க பொருளாளர் வி.சசிகுமார் ஆகி யோர் கருத்துரையாற்றினர். சாலைகளில் விபத்து இல்லாத நிலையை ஏற்படுத்த ஓட்டுனர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும், விபத்து இல்லாத தமி ழகத்தை உருவாக்க வேண்டும் என கருத்தரங்கில் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் சிறப்பு அமர்வில் பேசினார். மக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு மிக முக்கிய பணி செய்பவர்கள் ஓட்டுநர்கள் என பெருமிதத்தோடு குறிப்பிட்டார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் கருத்தரங்கை நிறைவு செய்து பேசுகையில், சுயமாக தொழில் செய்யும் வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் கட்டணம் சுங்க கட்டணம் இவைகளால் தொழில் துறையினர் மிகப் பெரிய பாதிப்பு அடைந்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது சிறு உற்பத்தியாளர்களைக் கொண்டு தான் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தியாவின் பொரு ளாதாரம் சிறு தொழில்களை நம்பித் தான் உள்ளது என தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு புதிய பொருளா தாரக் கொள்கை உருவாக்கப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை யினால் தற்போது எண்ணற்ற கார்ப்ப ரேட் முதலாளிகள் அதிகரித்து வரும் சூழல் மட்டும் தான் உள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டங்கள் -ஓட்டு நர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலை நம்பி இருக்கும் அனைவருக்கும் எதிரா னவை எனவும் அவர் தெரிவித்தார். கரூரில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை தருவதாகவும் போர்க்காலங்களில் ஏற்படும் உயிரிழப்பை காட்டிலும் ஒரே இடத்தில் அதிகமாக நடந்துள்ளது என வேதனையும் தெரிவித்தார். உலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் பேருந்து பயணம் இலவச மாக வழங்கப்படுகிறது எனவும், அங்கு நாட்டின் பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்துள்ளது தெரிவித்த அவர், தமிழகத்தில் தற்போது பெண் களுக்கு இலவச பேருந்து பயண சேவை நகரப் பேருந்துகளில் வழங்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்றினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்தார். மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
