பாலமேடு ஜல்லிக்கட்டு துணை முதலமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்
மதுரை,ஜன.16- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வரு கின்றன. உலகப்புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி ஜன வரி 16 வெள்ளியன்று நடைபெற்றது. மஞ்சமலை ஆற்றில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளை களும் 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்கி வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பிடி படாத சிறந்த காளைகளின் உரிமை யாளர்களுக்கும் துணை முத லமைச்சர் பரிசுகளை வழங்கி, பாராட்டினார். இந்நிகழ்வில் தமிழக வணிகவரி - பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், காவல் கண்காணிப் பாளர் கா.பஅரவிந்த், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் க.அன் பழகன், நடிகர்கள் சூரி, ஜீவா, உள் பட மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கண்டுரசித்தனர். அவனியாபுரம் முன்னதாக ஜனவரி 15 பொங்க லன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 900-க்கும் மேற்பட்ட காளைகளும் 500-க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை பொறுப்பு மேயர் தி. நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், காவல் ஆணையர் லோகநாதன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.
இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வர் துவக்கி வைக்கிறார்
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டியை ஜனவரி 17 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அமைச்சர்கள்,மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
