states

சண்டிகர் பகவந்த் மான் வெளிநாடு செல்ல மீண்டும் தடை

சண்டிகர் பகவந்த் மான் வெளிநாடு செல்ல மீண்டும் தடை

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் பகவந்த் மான், மாநில தொழில்துறை அமைச்சர் சஞ்சிவ் அரோரா ஆகியோர் பிப்ரவரி மாதம் பஞ்சாப் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாட்டுக்குச் செல்ல இருந்தனர்.  வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அரசியல் தலைவர்கள் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டியது அவசியம். இத்தகைய சூழலில், பகவந்த் மான், சஞ்சிவ் அரோராவின் பயணத்திற்கு மோடி அரசு தடை விதித்துள்ளது. பகவந்த் மான் வெளிநாடு செல்ல ஒன்றிய அரசால் அனுமதி மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே 2024ஆம் ஆண்டு பாரீஸில் (பிரான்ஸ்) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி (குறிப்பாக பஞ்சாப்பைச் சேர்ந்த வீரர்கள் அதிகம் இருந்ததால்) விளையாடும் போட்டியை நேரில் காண,அணியினரை உற்சாகப்படுத்த அனுமதி கோரி இருந்தார். ஆனால் மோடி அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.