tamilnadu

img

அமெரிக்க வரிச் சூறாவளியில் சிக்கிய மேற்கு தமிழ்நாடு ஒன்றிய அரசின் மௌனத்தால் நிலைகுலையும் ஜவுளித்துறை!

அமெரிக்க வரிச் சூறாவளியில் சிக்கிய மேற்கு தமிழ்நாடு ஒன்றிய அரசின் மௌனத்தால் நிலைகுலையும் ஜவுளித்துறை!

கோயம்புத்தூர், ஜன. 16- அ.ர. பாபு  தென்னிந்தியாவின் பொருளா தார எந்திரமாகத் திகழும் மேற்கு மண்டலம் இன்று முன்னெப் போதும் இல்லாத ஒரு ‘இருண்ட காலத்தை’ எதிர்நோக்கியுள்ளது. தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டர்’ எனப்படும் கோயம்புத்தூர், பின்ன லாடைத் தலைநகரம் திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முது கெலும்பாக விளங்கும் ஜவுளித்துறை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கையினால் உருவான வரி விதிப்புப் போரில் சிக்கிச் சிதைந்து வருகிறது. பாஜகவின் ஆதரவாளர்களாக வும், அக்கட்சியின் முக்கிய நிதி ஆதாரமாகவும் விளங்கும் இப்பகுதி யின் தொழிலதிபர்களே கூட, இன்று ஒன்றிய அரசின் மௌனத்தைக் கண்டு குமுறி வருவதுதான் இந்த நெருக்கடி யின் உச்சம்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வும் தொழிலதிபர்களின் குமுறலும் சமீபத்தில், மாநிலங்களவை உறுப் பினர் டோலா சென் தலைமையிலான 16 எம்பிக்கள் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு கோவைக்கு வருகை தந்தது. அதன் ஆய்வுக் கூட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (AEPC) முன்னாள் தலைவர் டாக்டர் ஆ. சக்திவேல், சைமா (SIMA) நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஏற்று மதியாளர்கள் கலந்துகொண்டனர். ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில், தொழிலதிபர்கள் கொட்டிய வார்த்தை கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; அவை அவர்களின் ‘பிழைப்புக்கான’ அபயக்குரல் எனலாம். குறிப்பாக, பாஜ கவின் பெரும் நிதிப் பங்களிப்பாளர் களாக அறியப்படும் தொழிலதிபர்கள், “நாங்கள் கட்சிக்கு அளித்த விசுவா சத்திற்குப் பிரதிபலனாக எங்களது வாழ் வாதாரம் பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?” என்ற ரீதியில் வேதனையைப் பகிர்ந்து கொண்ட தாக வெளியாகியுள்ள தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு : ஒரு பார்வை இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு செல்லும் ஆடைகளின் பங்கு மிக முக்கியமானது.

ஆண்டு ஏற்றுமதி மதிப்பு: சுமார் 16 - 17 பில்லியன் டாலர். தமிழகத்தின் பங்கு: சுமார் 5 பில்லியன் டாலர். வரி உயர்வு : ஆரம்பத்தில் 10-12% ஆக இருந்த இறக்குமதி வரி, 2025  ஆகஸ்ட் 27-க்குப் பிறகு படிப்படியாக உயர்ந்து, தற்போது 31% முதல் 34%  வரையிலும், சில குறிப்பிட்ட ஆடை வகைகளுக்கு 50% வரையிலும் எட்டி யுள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தை யில் இந்தியத் துணிகளின் விலை அதி ரடியாக உயர்ந்துள்ளது. 20 ஆண்டு களுக்கும் மேலாகத் தங்களை நம்பி யிருந்த வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க, இந்திய ஏற்றுமதியாளர்கள் நஷ்டத்தைச் சுமந்து கொண்டு 15-20%  வரை தள்ளுபடி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அண்டை நாடுகளின் ஆதிக்கம் இந்த வரிப் போரில் இந்தியா அடைந் துள்ள பின்னடைவு, அண்டை நாடு களுக்குச் சாதகமாக மாறியுள்ளது. வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 19 - 20% வரி வரம்பிற்குள் உள்ளன. பாகிஸ் தான் போன்ற நாடுகள் குறைந்த உற் பத்திச் செலவு மற்றும் வரிச் சலுகை களால் இந்தியாவிற்கு வர வேண்டிய ஆர்டர்களைத் தட்டிச் செல்கின்றன. வேலையிழப்பும் வாழ்வாதாரச் சிதைவும் பொருளாதார நெருக்கடி என்பது வெறும் லாப நஷ்டக் கணக்கு மட்டு மல்ல; அது லட்சக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் காரணியும் ஆகும். • மேற்கு மண்டலத்தில் ஜவுளி சார்ந்த தொழில்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.

• கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்; அல்லது பகுதி நேர வேலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். • எம்எஸ்எம்இ (MSME) எனப்படும் சிறு, குறு நிறுவனங்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. “ஜனவரி 2026-க்குப் பிறகு எங்களது முதலீடுகள் முற்றிலும் முடங்கும்” என்பதே ஒட்டுமொத்தத் தொழில் துறையினரின் எச்சரிக்கையாக உள்ளது. பருத்தி தட்டுப்பாடும் சங்கிலித் தொடர் விளைவுகளும் ஏற்றுமதி வரி ஒருபுறமிருக்க, உள்நாட்டு உற்பத்தியும் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. இயற்கை இடர்ப்பாடு: அக்டோபர் மாத கனமழையினால் பருத்தி விளைச் சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தேவை vs இருப்பு: இந்தியாவின் ஆண்டு பருத்தி தேவை 320 லட்சம் பேல்கள் (Bales). ஆனால், தற்போது 110 லட்சம் பேல்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. வரிச் சுமை: பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 11% இறக்கு மதி வரி, உள்நாட்டுப் பஞ்சு விலையை உயர்த்தியுள்ளது. இது நூல் விலை யையும், அதன் தொடர்ச்சியாக ஏற்று மதி விலையையும் பாதிக்கும் சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகிறது.

தொழில்துறையினர் முன்வைக்கும் உடனடித் தீர்வுகள் இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ஜவுளித்துறையினர் வலியுறுத்தியுள்ள முக்கியக் கோரிக்கைகள்: வட்டிச் சலுகை (Interest Subvention): ஏற்றுமதி கடன்களுக்கான வட்டிச் சலுகைத் திட்டத்தில் தற்போதுள்ள ரூ.50 லட்சம் என்ற உச்ச வரம்பை உடனடியாக நீக்க வேண்டும். சிறப்பு ஊக்கத்தொகை: அமெரிக்க வரிப் பிரச்சனை முடியும் வரை, ஏற்றுமதி மதிப்பில் 20% தொகையைச் சிறப்பு ஊக்கத்தொகையாக (Duty Credit Scrip) வழங்க வேண்டும். வரி ரத்து : பருத்தி இறக்குமதி மீதான 11% வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தூதரகப் பேச்சுவார்த்தை: அமெரிக் காவுடன் உயர்மட்ட வர்த்தகப் பேச்சு வார்த்தை நடத்தி, இந்தியத் தயாரிப்பு களுக்கான வரி விகிதத்தைக் குறைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இருளில் மூழ்கும் ஜவுளி மண்டலம் “புதிய சந்தைகளை உருவாக்கு வது என்பது ஓராண்டு கால உழைப்பு. ஆனால் பழைய வாடிக்கையாளர் களை இழப்பது என்பது ஒரு நிமிடச் செயல்.” தமிழகத்தின் ஜவுளித்துறை இன்று இந்த இக்கட்டான நிலையில் தான் இருக்கிறது. பாஜக ஆட்சியாளர்களுக்கு மிக  நெருக்கமானவர்கள் மட்டுமல்லாது, அக்கட்சிக்கு நிதியளிக்கும் ‘பெருந்த னக் கொடையாளர்களே’ இன்று வீதிக்கு வந்து முறையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை ஒன்றிய அரசு போர்க்கால அடிப்ப டையில் கையாளாவிட்டால், தென்னிந்தியாவின் பொருளாதார மையமான இந்த ‘ஜவுளி மண்டலம்’ வரலாறு காணாத நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயம் உள்ளது.